;
Athirady Tamil News

கொழும்பு விற்பனை நிலையத்தில் மோசடி ; உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

0

பம்பலப்பிட்டிய பகுதியில் உள்ள பிரபல விற்பனை நிலையமொன்றின் உரிமையாளருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காலாவதியான சாக்லெட் பிஸ்கட்டுக்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.