;
Athirady Tamil News

கிளிநொச்சி விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் உயிரிழப்பு

0

கிளிநொச்சி கனகராயன்குளம் பகுதியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி வவுனியா கனகராயன்குளம் பகுதியில் அதே திசையில் சென்று கொண்டிருந்த போது துவிச்சக்கர வண்டியில் மோதியுள்ளது.

இதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த நபர் கீழே விழுந்துள்ளார். விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவர் ஜேர்மன் நாட்டில் இருந்து வருகை தந்து கனகராயன்குளம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கனகராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.