;
Athirady Tamil News

வெளிநாடு பறக்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது இந்தியா போன்ற ரணில் விக்ரமசிங்க நாட்டிற்கு செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.

ஆயிரம் அரசியல் கூட்டங்களை நடத்த திட்டம்
தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சியின் பொறுப்பை ஏற்று எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிரணியில் உள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய, ஆயிரம் அரசியல் கூட்டங்களை நடத்தும் திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி தமது கருத்துக்களையும் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், அவரது உடல்நிலை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் காரணமாக ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு இறுதிக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்வார் என்றும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.