;
Athirady Tamil News

போதைப்பொருளுடன் சிக்கிய ஐந்து பாடசாலை மாணவர்கள்

0

பதுளையில் உள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் ஐந்து மாணவர்களை 3470 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் பசறை பொலிஸார் கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்கள் 19 வயதுடைய மூன்று மாணவர்களும் 17 வயதுடைய இரண்டு மாணவர்களும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பசறை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மாணவர்கள் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.