;
Athirady Tamil News

யாழில் அனுமதியின்றிய கட்டடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்

0

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இந்த சிவப்பு அறிவித்தல் பருத்தித்துறை பிரதேச சபையினால் ஒட்டப்பட்டுள்ளது.

அதன்படி வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

அதில் “பிரதேச சபையின் அனுமதியின்றி தங்களால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை உடன் நிறுத்தவும். மீறினால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவீர்கள்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.