அஞ்சல் பெட்டிக்குள் இருந்த 53 தோட்டாக்கள் ; திகைப்பில் பொலிஸார்
இரத்தினபுரி, மத்தேகொட பிரதேசத்தில் வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் 53 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.
மத்தேகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று 908) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரி – 56 ரக தோட்டாக்கள் 47 மற்றும் மில்லிமீற்றர் 9 ரக தோட்டாக்கள் 6 இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு சொந்தமான பழைய வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.