;
Athirady Tamil News

விசாவுக்கான ஆங்கிலத் தேர்வு: கடுமையாக்குகிறது பிரிட்டன்

0

இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நுழைவு இசைவு (விசா) கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான ஆங்கில மொழியறிவுத் தேர்வுகளைக் கடுமையாக்குவதற்கான மசோதாவை பிரிட்டன் அரசு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்வைத்தது.

நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த புதிய “பாதுகாப்பான ஆங்கில மொழித் தேர்வு’ உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் நடத்தப்படும். நுழைவு இசைவுக்காக விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது, கேட்பது, வாசிப்பது, எழுதுவது ஆகியவை அனைத்தும் பிரிட்டனில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவரின் அளவுக்கு இருக்க வேண்டும். இது பிரிட்டன் வரும் வெளிநாட்டினர் சிறப்பான முறையில் அனைவருடனும் உரையாடி சமூகத்தில் ஒருங்கிணைய உதவும் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது.

இது குறித்து உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் கூறுகையில், “பிரிட்டன் வருபவர்கள் எங்கள் மொழியைக் கற்றிருக்க வேண்டும்.

இல்லையென்றால் அவர்களால் நாட்டு வளர்ச்சியில் பங்களிக்க முடியாது’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.