சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில்.., 6 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
ரயில் விபத்து
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ரயில் பாதையில் இன்று பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தபோது, பயணிகள் ரயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில்மீது வேகமாக மோதியது.
இதில் பயணிகள் ரயில் சரக்கு ரயிலின் பெட்டிகள் மேலே ஏறி நின்றதில் இதில் பயணித்த பலரும் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே பொலிஸார் மீட்பு பணிகளை மேற்கொண்டு சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகளை செய்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் ரயில்வேயின் மருத்துவக்குழுவும் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்நிலையில், சத்தீஸ்கர் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 20க்கும் அதிகமானோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.