;
Athirady Tamil News

சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலை இலக்கிய விழா -2025

0

சண்டிலிப்பாய் பிரதேச கலாசார அதிகாரசபை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும்
கலை இலக்கிய விழா சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் நேற்றைய தினம் (04.11.2025) செவ்வாய்க்கிழமை சண்டிலிப்பாய் சீரணி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சண்டிலிப்பாய் பண்டிதர் க.ஈஸ்வரநாதபிள்ளை அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான கலை இலக்கிய விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சிறப்பு விருந்தினர்களாக யாழ். போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிவபாலன் சிவன்சுதன் , யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் .ஈஸ்வரநாதபிள்ளை குமரன், கௌரவ விருந்தினர்களாக சிற்ப, சித்திரக் கலைஞர் கலாபூஷணம் சுப்பிரமணியம் பத்மநாதன் , நாடகக் கலைஞர்
கலாபூஷணம் செல்லையா உதயச்சந்திரன் , வர்த்தகர் அந்தோனிப்பிள்ளை சூரியகுமார் கலந்து சிறப்பித்தனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மங்கல விளக்கேற்றல், தமிழ் மொழி வாழ்த்து, பிரதேச கீதம் இசைத்தல் மங்கல இசை (மானிப்பாய் ஜெகநாதன் குழுவினர்) வரவேற்பு நடனம் (மானிப்பாய் “லலித நர்த்தனாலயா” மாணவிகள்), இசையரங்கம் (செல்வி.த.அக்ஷரா மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி) மரபுக் கவிதை “ஒருபா ஒருபஃது”, கவிஞர் த.குணத்திலகம் நடனம் (“சண்முக கௌத்துவம்”,மானிப்பாய் “கலைக்கோயில்” மாணவி)
சிலம்பாட்டம் ,(சிவலீமன்” தற்காப்புக் கலைமன்றம்),நடனம்“கீர்த்தனை”(மானிப்பாய் “நடேஸ்வராலாயா” மாணவன் ), ஓராள் அரங்கு திருமதி.யாழினி வினோத்குமார் நாடகக் கலைஞர், பாரம்பரிய இசைச்சங்கமம் (சண்டிலிப்பாய் ஜெகதீஸ்வரன் குழுவினர்) போன்ற கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.

கலாபூஷணம் கே.ஆர்.டேவிட் அவர்களது ஞாபகார்த்த பேச்சுப் போட்டி பரிசளிப்பு மற்றும் 2024 தேசிய இலக்கிய விழா – தேசிய மட்ட வெற்றியாளர் கௌரவிப்பும், தேசிய இலக்கியப் போட்டியில் வெற்றியீட்டியோர் பரிசில் வழங்கலும் இடம்பெற்றன

இந் நிகழ்வில் கலை ஆர்வலர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து விழாவினைச் சிறப்பித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.