;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் சிறுவன் உள்ளிட்ட 23 பேர் அதிரடியாக கைது

0

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 23 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் (9) விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன் போது, 17 வயது சிறுவன் ஒருவன் 09 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அதனை விற்பனை செய்வதற்காகவே உடைமையில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

யாழ். புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள்
அதேவேளை போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவனை தவிர மேலும் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 550 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்களின் உடைமையில் இருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்க்கபப்ட்டுள்ளது.

மேலும் , நான்கு பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட 23 பேரும் யாழ். புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார் , சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.