மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி
பதுளை – ஹாலி-எல, உடுவர பகுதியில் இன்று(16) காலை மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உடுவர பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.