;
Athirady Tamil News

அமெரிக்க தாக்குதலில் 3 இந்தியர்கள் பலி- ஈரான் கடும் கண்டனம்

0

தெஹ்ரான்,

ஓமன் கடற்பகுதி அருகே எம்.டி.செட்டபெல்லா என்ற வணிக கப்பல் மீது அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் 3 இந்திய மாலுமிகள் பலியான சம்பவத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியதாவது:-

ஆயுதமேந்திய கொள்ளை
3 இந்தியர்களின் உயிரைப் பறித்த இந்திய வணிகக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் கொடூரமான தாக்குதல்கள், ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் அரசு ஆதரவிலான கடல்சார் கொள்ளைஆகியவற்றை உள்ளடக்கிய அமெரிக்காவின் தொடர்ச்சியான கொள்கைக்கு தெளிவான சான்றாக அமைந்துள்ளன.

பொறுப்பேற்க செய்ய வேண்டும்
கொல்லப்பட்ட இந்திய மாலுமிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்திய மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம். உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்து, கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் ஆபத்துக்குள்ளாக்கும் அமெரிக்காவின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு, சர்வதேச சமூகம் அந்நாட்டைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.