;
Athirady Tamil News

பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

0

பாகிஸ்தானின், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 15 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள கைபர் மாகாணத்தின் டெரா இஸ்மாயில் மாவட்டத்தில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக, நேற்று (நவ. 18) பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதேபோல், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், 5 தீவிரவாதிகள் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தி வரும் தலிபான்களும் பாகிஸ்தான் தலிபான் அமைப்பும் கூட்டணியின் அடிப்படையில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது முதல், பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.