தாய் மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்கம்: தங்க மோதிரம் பெற என்ன தகுதிகள்?
முதல்வர் விஜய் நேற்று மதுரையில் தொடங்கி வைத்த தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தில் பயன்பெற என்னென்ன தகுதிகள் இருக்க என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தாய் மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்கம்
ரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்ற பெயரில் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தவெக சார்பில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முத்து யாழினி என்ற குழந்தைக்கு 1 கிராம் தங்கம் மோதிரத்தை அணிவித்து முதல்வர் விஜய் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

மொத்தம் 27 பயனாளிகளுக்கு முதல்வர் விஜய் ஒரு கிராம் தங்க மோதிரத்தை வழங்கினார்.
மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்து, இஸ்லாமிய , கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.

அதன் பின்னர் முதல்வர் விஜய் பயனாளிகளுடன் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள 107 அரசு மருத்துவமனைகளில் இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைந்தந்த பகுதி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் இன்றே தொடங்கி வைக்கின்றனர்.
இந்த திட்டத்திற்காக முதற்கட்டமாக 1.28 லட்ச,லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தகுதிகள்
இந்த திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் பெற குழந்தை அரசு மருத்துவமனைகளில் பிறந்திருக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
குழந்தையின் பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
22 ஜூன் 2026 முதல் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன் பெறுவார்கள்.
இந்த திட்டம் நேரடியாக அரசு மருத்துவமனையுடன் இணைக்கப்படுவதால் இதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
கர்ப்பிணிப் பெண்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்களின் கர்ப்ப காலத்தை பதிவு செய்யப் பயன்படுத்தும் PICME மென்பொருள் மூலமாகவே இத்திட்டத்திற்கான விவரங்களும் தானியங்கி முறையில் சேகரிக்கப்படும்.
குழந்தை பிறந்த பின்னர் மருத்துமனையிலிருந்து வீடு திரும்பும் முன்னர் இந்த தங்க மோதிரம் வழங்கப்படும்.