;
Athirady Tamil News

அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கை க்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை

0

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான அனர்த்த அபாய குறைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (25.11.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன், உள்ளூராட்சி மன்ற கெளரவ தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சமூகத்தோடு அண்ணியொன்னியமாக செயற்பட்டு மக்களுக்கு இடர் முகாமைத்துவ சேவைகளை வழங்கியவர்கள் என்ற ரீதியில், வெள்ள அனர்த்த நிலைமைகளில் மட்டுமல்லாமல் வேறு இடர் நிலைமைகளிலும் மக்களோடு இணைந்து பணியாற்றியவர்களாக உள்ளதுடன் இது தொடர்பான தெளிவினை கொண்டவர்களாகவும் காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், அனர்த்த நிலைமைகளின் போது மக்களின் உண்மையான தேவைகளை இனங்கண்டு அதற்கேற்ற வகையில் அனர்த்த முகாமைத்துவ சேவைகளை வழங்குபவர்களாக இருப்பதுடன், அனர்த்தம்
இடம்பெறுவதற்கான இடங்களை முன்கூட்டியே இனங்கண்டு வைத்திருப்பதன் ஊடாக அனர்த்த நிலைமைகளில் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ சேவைகளை வழங்குவதற்கு இலகுவாக காணப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்குபவர்களுக்கு 03 நாள் சமைத்த உணவு வழங்கப்படும் எனவும், அரசாங்கத்தின் சுற்றறிக்கைகளின் தெளிவூட்டல்களையும் இச் செயலமர்வில் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டதுடன், அனர்த்த நிலைமைகளின் போது மாவட்டச் செயலகத்துடன் பிரதேச செயலகம், பிரதேச சபைகள் உள்ளடங்களாக துறைசார்ந்த திணைக்களங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைகளை வினைத்திறனாக செயற்பட முடியும் எனவும், தொடர்புடைய திணைக்களங்களுக்கிடையில் நல்ல உறவு இருத்தல் வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்து, கெளரவ உறுப்பினர்கள் தமதுக்குரிய பிரிவுகளில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருப்பின் தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு எவ்வேளையிலும் தொடர்புகொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், கெளரவ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடிலில் ஈடுபட்டு, அவர்களால் முன்வைக்கப்பட்ட அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்புடைய நீர்ப்பாசன திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபை உள்ளிட்ட திணைக்களங்களுடன் இணைந்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

இச் செயலமர்வில்அனர்த்த அபாய குறைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளரால் மேலதிக தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன்,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் மற்றும் நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் ஆகியோரும் பங்குபற்றி கருத்துக்களை வழங்கினார்கள்.

இச் செயலமர்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.