தமிழர் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் மரணம் ; பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்
ஏ9 வீதி கிளிநொச்சி ரெலிகொம் அருகிலுள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாக அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் உறங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவ இடத்தில் கிடந்த நிலையில் குறித்த நபர் மரணமடைந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
அவரது கைகளில் இரத்தக் காயங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பான புகைப்படத்தில் அவை தெளிவாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.