சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கையானது இன்று (19) மாலை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பர, மினிப்பே,மெததும்பர ஆகிய பகுதிகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் மதுரட, நில்தண்டாஹின்ன, வலப்பனை, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்குமே மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.