;
Athirady Tamil News

ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் பிறந்தநாளன்று நடைபெற்ற சமூக செயற்பாடு

0

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 29-12-2025 அன்று வேலணை பிரதேச வைத்தியசாலையில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம் ) உப தலைவர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் முழுமையான சிரமதான நிகழ்வு நடைபெற்றது.
காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய சிரமதான நிகழ்வு மாலை நான்கு மணி வரை நடைபெற்றது . சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டபவர்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்களின் பாரியாரான சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் நிதியுதவியில் நுளம்பு வலைகள் , நெஸ்ரமோல்ட் , மற்றும் சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு மதிய உணவு , சிற்றுண்டி, தேநீர் விருந்து , குளிர்பானம் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்தோடு வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டதோடு வைத்தியசாலையின் பாவனைக்காக 10 நுளம்பு வலைகள், 10 தலையணைகள் மற்றும் கிருமி நாசினி பொருட்களும் வழங்கப்பட்டன .

குறித்த சிரமதான செயற்பாட்டு நிகழ்வுகளில் சூழகம் அமைப்பின் தலைவர் திரு.மாணிக்கவாசகர் இளம்பிறையன் , செயலாளர் கருணாகரன் நாவலன், புங்குடுதீவு மடத்துவெளி கிராம சேவகர் திரு. ச.சிறீதரன் (நிமால்) , வேலணை ஜே/13 வட்டார கிராமசேவகர் தனுருத்ரி , வேலணை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தின் பிரமுகர் ஜெகநாதன் மாஸ்ரர் மற்றும் வேலணை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் தாதியர்கள், ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

வெறுமனே நிவாரணப் பொருட்களை வழங்காது 30 பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் வேலணை பிரதேச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்மாதிரியான பாரிய சிரமதான செயற்பாடாக இச்செயற்பாடு அமைந்திருந்ததாக வேலணை பிரதேச வைத்தியசாலையின் மருத்துவர் தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.