;
Athirady Tamil News

இன்னும் 10 சதவீதம் தான் மீதமுள்ளது; பெரும் நம்பிக்கையில் உக்ரைன் ஜனாதிபதி

0

ரஷ்யா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகிவிட்டது. 10 சதவீதம் மீதமுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உக்ரைன் 10 சதவீத தொலைவில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அமைதி ஒப்பந்தம்
இதற்காக 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை ட்ரம்ப் பரிந்துரைத்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா-உக்ரைனுடன் அமெரிக்க குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும் ரஷ்ய ஜனாதிபதி புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியதாவது:- அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகிவிட்டது. 10 சதவீதம் மீதமுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உக்ரைன் 10 சதவீத தொலைவில் உள்ளது.

அந்த 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலைவிதியையும் தீர்மானிக்கும். போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் விரும்பினாலும், எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க எந்தவொரு தீர்வும் வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்.

உக்ரைனின் நீண்டகால பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடிய அல்லது ரஷ்யாவைத் தூண்டிவிடக்கூடிய சலுகைகள் மூலம் அமைதி ஒப்பந்தம் ஏற்படக்கூடாது. நாங்கள் சரணடைய தயாராக இருக்கிறோம் என்று யாராவது நினைத்தால் அது தவறானது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.