;
Athirady Tamil News

சிரியா: ஆயுத சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து

0

டமாஸ்கஸ்,

சிரியாவில் ஆயுத சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு சிரியா. இந்நாட்டில் 2011ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடைபெற்றது. இந்த உள்நாட்டு போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதக்கிடங்குகளில் அவ்வப்போது வெடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

வெடி விபத்து
இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ மாகாணம் அல் இஸ் நகரில் ராணுவ படைத்தளம் உள்ளது. இந்த ராணுவ படைத்தளத்தில் ஆயுத சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த ஆயுத சேமிப்பு கிடங்கில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிவிபத்து குறித்து அறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.