;
Athirady Tamil News

ரஷிய நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் புதின் கட்சி வெற்றி

0

மாஸ்கோ

ரஷிய நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் புதினின் ஆளும் ஐக்கிய ரஷிய கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ரஷியாவில் கடந்த 18-ந்தேதி தொடங்கி 3 நாட்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் புதினின் ஆளும் ஐக்கிய ரஷிய கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில், தபால் வாக்குகள் உள்ளிட்ட பதிவான வாக்குகளில் 95 சதவீதம் அளவுக்கு எண்ணப்பட்டன.

57.83 சதவீதம்
இதுபற்றி மத்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட செய்தியில், அதிபர் புதினின் ஆளும் ஐக்கிய ரஷிய கட்சி, 57.83 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்து உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நாடாளுமன்ற கீழ் அவைக்கு நடந்த தேர்தலில் அக்கட்சி 49.8 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

355 இடங்கள்
உக்ரைன் நாட்டுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா போரை தொடங்கியது. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து, 5-வது ஆண்டாக இந்த மோதல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில், எப்படியும் புதினின் கட்சி வெற்றி பெறும் என்பது முன்பே தெரிந்திருந்தபோதும், இந்த தேர்தலானது புதினின் ஆட்சிக்கான சவாலாக இருக்கும் என அரசியல் நிபுணர்களால் பார்க்கப்பட்டது.

மேயர் தகவல்
இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில், மொத்தமுள்ள 450 இடங்களில் 355 இடங்களை புதினின் கட்சி கைப்பற்றி, பெரும்பான்மையை பெற்றுள்ளது. ரஷியா மீது உக்ரைன் தரப்பில் இருந்து நேற்று அதிகாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கனை கொண்டு நடந்த தாக்குதலில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட டிரோன்கள் மாஸ்கோ நகரை நோக்கி ஏவப்பட்டன. எனினும், அவை முறியடிக்கப்பட்டு விட்டன என மேயர் ஆண்ட்ரி வோரோபியோவ் கூறினார்.

இதில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குடியிருப்பு கட்டிடம் ஒன்று சேதமடைந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள், 74 வயது முதியவர் மற்றும் 44 வயது பெண் என 2 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். எனினும், இதுபற்றி உக்ரைன் உடனடியாக எதுவும் கூறவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.