வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் புத்தாக்கக் கண்காட்சி
;
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் அதிபர் கிறேஸ் தேவதாயினி தேவராஜாவின் தலைமையில் நடைபெறும் இப்புத்தாக்கக் கண்காட்சி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மற்றும் நாளைய தினம் புதன்கிழமை ஆகிய இரு நாட்களும் பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கண்காட்சியைப் பார்வையிட்ட ஆளுநர், மாணவர்கள் தமது சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கியிருந்த பல்வேறு படைப்புகளை நேரில் பார்வையிட்டு, அவை தொடர்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.