வீட்டுக்கு வந்த பெண்ணால் வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தென்னிலங்கையில் நடந்த சம்பவம்
ஹம்பாந்தோட்ட, லுணுகம்வெஹெர பிரதேசத்தில் மருத்துவரின் வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண், வீட்டில் இருந்து சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லுணுகம்வெஹெர பிராந்திய மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவரின் வீட்டில் நேற்று காலை இந்தத் திருட்டு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் மத்துகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
பெண்ணின் செயல்
எனினும் குறித்த பெண்ணை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
செய்தித்தாளில் வெளியான விளம்பரத்தை பார்த்து, வேலைக்குச் சேர்ந்த பெண்ணே இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படுகிறது.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.