;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்து: நடுரோட்டில் பற்றி எரிந்த பஸ் – 6 பேர் பலி

0

பெர்ன்,

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் பிரிபொங் மாகாணம் கெர்சர் நகரில் நேற்று மாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 11 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், கெர்சர் நகர சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ்சில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து வெளியேற முயன்றனர். 5 பயணிகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். ஆனாலும், இந்த தீ விபத்தில் பஸ்சில் இருந்த 6 பயணிகள் உடல்கருகி உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பஸ்சில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், காயமடைந்த 5பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். பஸ்சில் தீ பற்றியது எப்படி? இதில் சதிச்செயல் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.