;
Athirady Tamil News

அம்பாறை மாவட்ட புதிய  அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி  கடமை   பொறுப்பேற்பு

0

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி அவர்கள் இன்று கடமையை  பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்டுள்ள இவர்    சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா கல்லூரியின் (C.W.W. Kannangara College) பழைய மாணவராவார்.

கண்டி மத்துகமவைச் சேர்ந்த இவர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தினை சேர்ந்தவராவார். இவர் கல்முனை,மகாஒயா,உகண, பதியத்தலாவ,திகன ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும், அனுராதபுரம் மோட்டார் வாகன திணைக்களத்தின் ஆணையாளராகவும் கடமையேறியுள்ளார்.

இவர்  இறுதியாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப் பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன், அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 


You might also like

Leave A Reply

Your email address will not be published.