;
Athirady Tamil News

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான திகதி இன்று அறிவிப்பு!

0
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான திகதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
சட்ட மருத்துவ அதிகாரியின் நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக, பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள்  தெரிவித்தனர்.

அதன்படி, மனித புதைகுழி வளாகத்தை நேரில் சென்று நீதவான் உள்ளிட்ட குழுவினர் இன்று ஆய்வு செய்ததன் பின்னர், அகழ்வு பணிக்கான திகதி அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக, மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கத் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது, சீரான வானிலை நிலவுவதால், சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுப் பணிகளை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றனர்.

சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கட்ட அகழ்வுப் பணிகளின் போது, சுமார் 250 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டன.

அத்துடன், சிறார்களின் புத்தகப்பை, பொம்மைகள், ஆடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.