மட்டக்களப்பில் மாயமான இளைஞன் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு களுவன்கேணி கடற்பரப்பில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி, வோட்வாடி வீதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இரண்டு நாட்களுக்கு முன்னர் களுவன்கேணி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தின்போது தோணியிலிருந்த இளம் மீனவர் கடலில் மூழ்கி காணாமல் போனார்.
அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை களுவன்கேணி கடற்கரையோரத்தில் அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.