;
Athirady Tamil News

கொலம்பியாவில் விமான விபத்து: உள்ளூா் எம்.பி., 14 போ் உயிரிழப்பு

0

வடகிழக்கு கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த அந்நாட்டு எம்.பி. உள்பட 15 பேரும் உயிரிழந்தனா்.

வடக்கு சாந்தாண்டோ் மாகாணத்தில் உள்ள குகுடா நகரில் இருந்து ஓகானா நகரை நோக்கி, அரசுக்குச் சொந்தமான சடேனா நிறுவனத்தின் சிறிய ரக விமானம் கடந்த புதன்கிழமை புறப்பட்டது.

சுமாா் 40 நிமிஷ பயண இலக்கைக் கொண்ட இந்த விமானம், புறப்பட்ட சில நிமிஷங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்தது. இதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், குராசிகா மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது கண்டறியப்பட்டது.

இது குறித்து தகவலறிந்ததும் மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். எனினும், விமானத்தில் இருந்த 2 விமானிகள் மற்றும் 13 பயணிகள் என மொத்தம் 15 பேரும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டனா்.

உயிரிவந்தவா்களின் கொலம்பியா பிரதிநிதிகள் சபை (நாடாளுமன்ற கீழவை) உறுப்பினா் டியோஜெனெஸ் குயின்டெரோவும் ஒருவா் என உறுதிப்படுத்தப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.