இரு பாடசாலை மாணவர்கள் மோதல்; 7 மருத்துவமனையில்
களுத்துறை – பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலை மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (5) இடம்பெற்றுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்காக இடம்பெற்ற விசேட வகுப்பில் கலந்துகொண்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையில் இவ்வாறு தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.