;
Athirady Tamil News

இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி வவுனியா பிரதேசத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம்!

0

யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி வவுனியா, வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர் தேவராசா திவக்சனுடன் இணைந்து வெங்கலச்செட்டிகுளம் பிரதேசத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில், வெண்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையின் உறுப்பினர் தேவரசா திலக்சன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம். ஜவாஸ் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் கேதீஸ்வரன் துஜன்தன் ஆகியோர் துணைத் தூதுவரை நேரில் சந்தித்து பிரதேச அபிவிருத்தி தொடர்பான ஆவணங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

அன்று வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய, இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி வவுனியாவுக்கு நேரில் வருகை தந்திருந்தார்.

வவுனியா பிரதேசத்தின் அபிவிருத்தி, இளைஞர் மற்றும் பெண்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து தனது முழு ஆதரவையும் வழங்கும் என இவ்விஜயத்தின் போது உறுதியளிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, வெங்கலச்செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரசேகரஈச்சரம் (வௌவாலை செட்டிகுளம்) சிவனாலயத்திற்கு விஜயம் செய்த துணைத் தூதுவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புப் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, , அப்பகுதியின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள், வெங்கலச்செட்டிகுளம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் புதிய சுற்றுலா மையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், எதிர்காலத்தில் இப்பகுதிகளின் வளர்ச்சித் திட்டங்களில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஆராய்ந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.