வெள்ளப் பெருக்கு மற்றும் அனர்த்த முகாமைத்துவத்தில் இராணுவத்தின் ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல்
;
யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் 36ஆவது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ்.மேடகொட கடந்த நவம்பர் 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றிருந்தார்.
இதன்போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துப் பரிமாறப்பட்டதுடன், எதிர்வரும் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இடர்கள் ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கும் அனர்த்த முகாமைத்துவப் பணிகளை முன்னெடுப்பதற்கும் பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.