;
Athirady Tamil News

பாடசாலை மதிய உணவுத் திட்டத்தின் போசாக்கு மற்றும் சுகாதாரத் தரம் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட வேண்டும்

0
பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் போசாக்குத் தரம் மற்றும் சுகாதாரத் தன்மை ஆகியனவும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் வகிபாகத்தையும் பங்களிப்பையும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது, கருத்து தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஊடாக ஒருங்கிணைத்து, மாவட்ட ரீதியாக உற்பத்தியாளர்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றமும் தமது ஆட்சிப் பகுதிக்குள் வாழ்வாதார நோக்கில் அல்லது சிறிய மற்றும் நடுத்தர அளவில் உணவு உற்பத்தியில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பங்கேற்புடன் அவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகளை குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது முன்னெடுக்க வேண்டும்
இதன்போது, பிரதேச செயலகங்கள் ஊடாக வணிக நிறுவனப் பதிவுக்கு விண்ணப்பிக்கும்போது காணி தொடர்பான ஆவணங்கள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதில் சிக்கல்கள் நிலவுகின்றன.
எனவே  இவ்விடயத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக உரிய அறிவுறுத்தல்களை மீள வழங்கி, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

அதேவேளை, பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் போசாக்குத் தரம் மற்றும் சுகாதாரத் தன்மை ஆகியனவும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.