;
Athirady Tamil News

கடவுச்சீட்டு, விசா விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் – குடிவரவுத் திணைக்களம் அறிவிப்பு

0

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படும் வரை கடவுச்சீட்டு மற்றும் விசா தொடர்பான அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தொழில்நுட்பக் கோளாறு

தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டவுடன், வழமைப் போன்று சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் கணினி அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இது தொடர்பான தகவல்களை அறிய 011 210 1540 / 011 210 1545 என்ற எண்களில் குடிவரவுத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.