;
Athirady Tamil News

குப்பை கொட்டினால் இனி சிக்கல்தான்! நல்லூரில் கண்காணிப்பு கமராக்கள் மூலம் அதிரடி நடவடிக்கை

0
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் முகமாக 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி, அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, கழிவு கொட்டுபவர்கள் அடையாளப்படுத்தி அபராதம் அறவிடப்படும் நடவடிக்கைகள் பிரதேச சபையினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டுகின்ற செயற்பாடுகள் வெகுவாகக் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஐந்து மாத காலத்தில் நான்கு இலட்சத்து இருபது ஆயிரம் ரூபாவுக்கும் மேல் அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளது.

எனவே, பொது இடங்களில் குப்பைகளைப் போடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களது சட்டவிரோத செயற்பாடு எமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்படும் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.