;
Athirady Tamil News

யாழில் தேவைக்கு மேலதிகமாகவுள்ள படையினரை விலக்க பேச்சுக்கள் ஆரம்பம்

0
யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு தேவைக்கு மேலதிகமாக உள்ள படையினரை விலக்கி, மக்களின் நிலங்களை மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு படையினருடன் கலந்துரையாடல்களை நடத்திவருகின்றோம். அதன் அடிப்படையில் பாதுகாப்பு தேவைக்கு மேலதிகமாகவுள்ள படையினரை விலக்கி, மக்களின் நிலங்களை மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அதேசமயம் சில நிலங்களை விடுவிப்பதில் சிக்கல்கள் உள்ளன. மேலும் சில நில உரிமையாளர்களை அடையாளம், காண முடியாத நிலையும் உள்ளது. ஆகவே, விடுவிக்ககூடிய நிலங்களை விடுவித்து வருகிறோம். இனிமேலும் விடுவிப்போம். வடக்கு – தெற்கு என்ற பிரிவினை எக்காலத்திலும் வேண்டாம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.