;
Athirady Tamil News

இந்திய மீனவர்கள் அத்துமீறல் விடயத்தில் அரசு அசமந்தம்

0
இந்திய மீனவர் அத்துமீறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை என கூறியுள்ள வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம், இந்திய மீனவர் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் கூறியுள்ளார்.
மன்னாரில் உள்ள கடற்றொழிலாளர் இணைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மன்னார் தொடக்கம் தெற்கு பகுதியாக இருக்கின்ற சௌத்பார், வங்காலை, சிலாபத்துறை, முள்ளிக்குளம் போன்ற, கடற்பகுதிகளுக்கு தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக நாங்கள் அரசுக்கு பல்வேறு விடையங்களை தெளிவுபடுத்தினாலும், அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை. டித்வா புயலுக்கு பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்த்த நிலையில், புயலின் பின்னர் அவர்களின் வருகை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. அரசாங்கம் அவர்களின் வருகையை கட்டுப்படுத்தாமல், குறித்த விடயத்தை கண்டு கொள்ளாமல் அரசாங்கம் அசமந்தமாக இருக்கிறது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.