;
Athirady Tamil News

குடும்ப தகராறில் மனைவிக்கு நேர்ந்த கதி; தப்பியோடிய கணவன்

0

மாரவில பிஅரதேசத்தில் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவனைக் கைது செய்ய மாரவில பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாரவில, கட்டுநேரிய – பேன்கட பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுக்கையறையிலிருந்த பெண்ணின் சடலம்
வீட்டிலொன்றில் இடம்பெற்ற கொலை தொடர்பில் நேற்று (01) இரவு 11.40 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, உயிரிழந்த பெண்ணின் சடலம் வீட்டின் படுக்கையறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கணவன் தனது மனைவியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளதாகவும், சந்தேகநபரான கணவன் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.