;
Athirady Tamil News

119வது மாபெரும் கிரிக்கெட் போட்டி

0

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119வது மாபெரும் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 5ம் திகதி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி 6ம்,7ம் திகதி என மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது.

வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டியின் பத்திரிகையாளர் சந்திப்பு யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது பாடசாலை அதிபர்களால் குறித்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 23வது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் கொண்ட ஒரு நாள் போட்டி மார்ச் 14ம் திகதி யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.