;
Athirady Tamil News

ஈரான் குறித்து டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிக்கை

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகக் கணக்கின் ஊடாக ஈரான் அரசாங்கத்தைக் குறிவைத்து கடுமையான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

“அவர்களது வான் பாதுகாப்பு அமைப்புகள், விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டன,” என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

இந்த அறிக்கையுடன், வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியான “ட்ரம்ப் கோட்பாட்டின் பிறப்பு” (The birth of the Trump Doctrine) என்ற கட்டுரையையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

ஈரான் அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், “அவர்கள் பேச விரும்புகிறார்கள். நான் ‘மிகவும் தாமதமாகிவிட்டது!’ என்று கூறினேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

பிராந்திய மோதல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு பின்னணியில், ட்ரம்பின் இந்த அறிக்கை ஈரான் விவகாரத்தில் அவர் மிகவும் கடுமையான கொள்கையைப் பின்பற்றுவதையே காட்டுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.