;
Athirady Tamil News

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் புதிய திருத்தம்

0

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒட்டோ டீசல் 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 303 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 353 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 317 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 365 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மண்ணெண்ணெய் 13 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 195 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.