;
Athirady Tamil News

புதிய அரசாங்க அதிபரை சந்தித்தார் அஷ்ரப் தாஹிர் எம்.பி

0

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக பொறுப்பேற்ற அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்   வியாழக்கிழமை(12)   நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இச்சந்திப்பு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன், இதன் போது மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், நிர்வாக ஒழுங்குகள் மற்றும் மக்கள் நலத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், அம்பாறை மாவட்டத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இணைந்து செயற்பட வேண்டிய தேவையும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இச்சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா உடனிருந்தார்.

 
You might also like

Leave A Reply

Your email address will not be published.