;
Athirady Tamil News

எரிபொருள் இன்றி வெளியேறும் பவுசர்கள்; பெரும் ஏமாற்றம்

0

இன்றும் (21) நாளையும் (22) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தடு.

எனினும் , இன்றைய தினம் கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலன்னாவ முனையத்திற்கு பவுசர்கள்
பதிவு செய்யப்பட்ட எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்று காலை கொலன்னாவ முனையத்திற்கு வருகை தந்த எரிபொருள் பவுசர்கள், எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் திரும்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமை பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே நேற்று (20) தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இவ்வாறானதொரு பின்னணியில் இன்று கொலன்னாவ முனையத்திற்கு வந்த பவுசர்கள் எரிபொருள் இன்றித் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.