“சமகால அரசியலும், போராளிகளின் வகிபாகமும்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
அந்நிகழ்வில் “வரலாற்றின் வேர்கள்” எனும் விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வில் போராட்ட கால பகுதியில் புரட்சி பாடல்களை பாடிய பாடகர்களான மறைந்த பாடகர் S,G சாந்தன், சுகுமார், நிரோஜன் பார்வதி சிவபாதம் உள்ளிட்ட பாடகர்கள், பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களான , இசைவாணர் கண்ணன் , அருணா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
அத்துடன் விருது விழாவில் புலிகளின் குரல் செய்தி ஆசிரியரான மறைந்த ரி.தவபாலன் மற்றும் யாழ் ஊடக அமையத்தின் தலைவர் குமாரசுவாமி செல்வக்குமார் , முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் ஆகிய இரு மூத்த ஊடகவியலாளர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.