;
Athirady Tamil News

காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!

0

ஈரானுடனான போருக்கு நேட்டோ அமைப்பு உதவவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

ஈரானுடனான போருக்கு நேட்டோ அமைப்பு உதவவில்லை என விமர்சித்துள்ள டிரம்ப், தனது சமூக வலைதளத்தில், “அமெரிக்கா இல்லாமல், நேட்டோ அமைப்பு ஒரு காகிதப் புலி போன்றது.

அணு ஆயுதம் கொண்டிருக்கும் ஈரானுடனான போரில் சேர அவர்கள் (நேட்டோ) விரும்பவில்லை.

ஆனால், இப்போது இந்தப் போர் ராணுவரீதியாக வெற்றி பெற்றது. அவர்களுக்கும் இப்போது குறைந்தளவே ஆபத்து உள்ளது.

எண்ணெய்க்கான அதிக விலையை செலுத்த அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டபோதிலும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அவர்கள் உதவ விரும்பவில்லை. இது ஒரு ராணுவ சூழ்ச்சியே. இதுவே எண்ணெய்யின் அதிக விலைக்கான ஒரே காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் பதிலடி அளித்து வருகிறது. மேலும், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியுள்ளது.

இதனையடுத்து, ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க போர்க் கப்பல்களை அனுப்புமாறு நேட்டோ நாடுகள் உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.