யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை;சம்பவத்தால் பரபரப்பு
யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் மகளின் கணவனான 21 வயது மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சாவகச்சேரியில் நேற்றுமுன்தினம்(19) இடம்பெற்றுள்ளது.
குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
விரிவுரையாளரின் மகன் முறைப்பாடு
இதனையடுத்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன் தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர்.
அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில், அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றையதினம்(19) திருகோணமலை பகுதியில் வைத்து விரிவுரையாளரின் மகளான 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் , மருமகனின் தாக்குதலில் மாமியார் உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.
சடலத்தை எடுத்து சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
விரிவுரையாளர் மருமகனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் யாழில் அடிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
