;
Athirady Tamil News

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானசேவைகள் மீண்டும் ரத்து

0

கொழும்பு மற்றும் டுபாய் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தனது சில வானூர்தி சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, மார்ச் 21 ஆம் திகதி முதல் மார்ச் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இயக்கப்படவிருந்த UL231 மற்றும் UL232 ஆகிய வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திடீர் மாற்றத்தினால் பாதிக்கப்படக்கூடிய பயணிகள், தங்களது வானூர்திப் பயணங்களின் தற்போதைய நிலை குறித்து நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்ச்சியாக அவதானிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்கள் அல்லது அவசர உதவிகள் தேவைப்படும் பயணிகள் இலங்கைக்குள்1979 (ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உலகளாவிய தொடர்பு மையம்) ,சர்வதேச அளவில் +94 11 777 1979 ஆகிய இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.