;
Athirady Tamil News

4700 லீற்றர் டீசல், 800 லீற்றர் பெற்றோல் மீட்பு! யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் பரல்கள் பறிமுதல்

0

யாழ்ப்பாணம் – ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலையொன்றில் பதுக்கி வைத்திருந்த பெருமளவு எரிபொருட்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதன்போது 4700 லீற்றர் வரையிலான டீசலும் 800 லீற்றர் பெற்றோலும் 400 லீற்றர் மண்ணெண்ணெயும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொறுப்பதிகாரி பிறேமதிலகா தலைமையிலான குழுவினர்
ஊரெழுவில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியின் களஞ்சியசாலையில் இன்று நடத்திய சோதனையின்போது பரல்களில் வைக்கப்பட்டிருந்த குறித்த பெருந்தொகையான எரிபொருட்களை மீட்டனர்.

சம்பவம் தொடர்பில் களஞ்சியசாலையில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட எரிபொருட்கள் மற்றும் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பர் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.