;
Athirady Tamil News

டிரம்பின் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சி

0

ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 15% சரிந்து, ஒரு பீப்பாய் 96 டொலராகக் குறைந்தது. அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலை 13.5% சரிந்து, ஒரு பீப்பாய் 85.28 டொலராக வீழ்ச்சியடைந்தது.

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா முன்னதாக எச்சரித்திருந்தது.

இதனால் போர் பதற்றம் அதிகரித்து எண்ணெய் விலை உயர்ந்திருந்தது. இந்நிலையில், ஈரானுடன் நடத்தப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் “ஆக்கபூர்வமாக” இருந்ததாகத் தெரிவித்த ட்ரம்ப், அடுத்த 5 நாட்களுக்கு ஈரான் மீதான எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் நடத்த வேண்டாம் எனத் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.