தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய வகுப்பறை
ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாகாண கல்வி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.
