;
Athirady Tamil News

தீக்கிரையான அமெரிக்க வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! தாக்குதல் நடத்தப்பட்டதா?

0

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து நேரிட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்த்தர் துறைமுகத்தில் உள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேரிட்ட பயங்கர வெடிவிபத்தில், கட்டமைப்புகள் தீயில் பலத்த சேதமடைந்தன. தீ விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கரும்புகை விண்ணை முட்டின.

பயங்கர வெடிச்சத்தத்துடன் நேரிட்ட தீ விபத்தால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இந்தப் பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டதாகவும், வீடுகள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் குலுங்கியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, டெக்சாஸ் வளைகுடா கடற்கரைக்கு அருகிலும், டெக்சாஸ் – லூசியானா எல்லையிலும் அமைந்திருக்கிறது. இந்த வலேரோ சுத்திகரிப்பு நிலையம், ஒருநாளைக்கு சுமார் 3,80,000 பீப்பாய்கள் அளவுக்கான கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறன் கொண்டது எனத் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த ஆலையில் சுமார் 770 தொழிலாளர்கள் பணிபுரிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது தினமும் 4,35,000 பீப்பாய்களுக்கும் அதிகமான பெட்ரோல், டீசல் மற்றும் ஜெட் விமானங்களுக்கான எரிபொருள் உற்பத்தி செய்கிறது.

சுத்திகரிப்பு நிலையத்தில், ஹீட்டர் அதிக சூடானதால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை.

ஈரான் – அமெரிக்கா இடையேயான தாக்குதலில் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள், குடியிருப்புகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இதன்காரணமாக அமெரிக்காவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.